பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் 'கெத்து' காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு
பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் 'கெத்து' காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு
பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் 'கெத்து' காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு

கை குலுக்கல்
இந்த நிலையில், தற்போது நடந்துவரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (செப்.,14) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முன்னதாக இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி நேற்று போட்டி நடைபெற்றது. இரு அணிகளின் கேப்டன்களும் 'டாஸ்' போடுவதற்கு முன்னதாக கை குலுக்குவது வழக்கமான நடைமுறை. ஆனால், நேற்றைய போட்டியின்போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்கவில்லை.
அதிர்ச்சி
மறுபுறம், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினர் கைகுலுக்குவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய வீரர்களின் செயலைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கை குலுக்கி செல்வது, கிரிக்கெட் விளையாட்டில் நாகரிகமான நடைமுறையாக இருந்த நிலையில், நேற்றைய போட்டியில் பாகிஸ்தானிடம் எந்த சமரசமும் இல்லை என்பது போல, இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.
ராணுவத்திற்கு சமர்ப்பிப்பு
ஆட்டத்திற்குப் பிந்தைய பேட்டியில் கை குலுக்காதது பற்றி பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார், ''பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம். இந்த வெற்றியை ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறோம்'' என்றார். பலரின் கோரிக்கையை தாண்டி போட்டியில் பங்கேற்றாலும், கை குலுக்காமல் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த இந்திய வீரர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.