Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜெர்மன் மாணவர்கள்முதல்வருடன் சந்திப்பு

ஜெர்மன் மாணவர்கள்முதல்வருடன் சந்திப்பு

ஜெர்மன் மாணவர்கள்முதல்வருடன் சந்திப்பு

ஜெர்மன் மாணவர்கள்முதல்வருடன் சந்திப்பு

ADDED : செப் 15, 2011 04:22 AM


Google News
புதுச்சேரி:ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழக மாணவர்கள் புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 10 ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் உல்ரிக்கே நிக்லஸ் தலைமையில் நேற்று புதுச்சேரி வந்தனர்.

கோர்க்காடு கிராமத்திற்கு சென்று இந்திய கிராமிய கலாசாரம் பற்றி ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை நிகழ்வுகளை ஜெர்மன் மாணவர்கள் பார்வையிட்டனர். பின் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.இந்திய கலாசாரம், இந்திய அரசியலமைப்பு, புதுச்சேரி மாநில வளர்ச்சி குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டறிந்தனர். அமைச்சர் ராஜவேலு உடனிருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us