/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தப்பியோடிய கைதியைவிரட்டி பிடித்தது போலீஸ்தப்பியோடிய கைதியைவிரட்டி பிடித்தது போலீஸ்
தப்பியோடிய கைதியைவிரட்டி பிடித்தது போலீஸ்
தப்பியோடிய கைதியைவிரட்டி பிடித்தது போலீஸ்
தப்பியோடிய கைதியைவிரட்டி பிடித்தது போலீஸ்
ADDED : செப் 13, 2011 11:49 PM
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் தப்பி ஓடிய கைதியை போலீசார் விரட்டி
பிடித்தனர்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நைனாங்குப்பத்தை
சேர்ந்த லட்சுமிநாராயணன் மகன் சுரேஷ்,19.
இவர் தனது நண்பர் வேலு
என்பவருடன், கடந்த 10ம் தேதி மதியனூர் வழியாக மோட்டார் சைக்கிளில்
சென்றார். அப்போது பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ராஜா காரை
வழியில் நிறுத்தியிருந்தார். இதனை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ராஜா,
சங்கர், கிருஷ்ணன் சேர்ந்து சுரேஷ், வேலு இருவரையும் தாக்கினர்.இது குறித்த
புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ராஜாவை உளுந்தூர்பேட்டை போலீஸ்
ஸ்டேஷனில் வைத்திருந்தனர். நேற்று மதியம் 1.20 மணிக்கு ராஜா வாந்தி வருவதாக
கூறியதால், அவரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஸ்டேஷனுக்கு
பின்புறம் அழைத்து சென்றார். அப்போது திடீரென ராஜா, போலீஸ் ஸ்டேஷன் சுவர்
மீது ஏறி குதித்து தப்பியோடினார்.உடனடியாக போலீசார் துரத்திச் சென்றதை
பார்த்த பொதுமக்கள் ராஜாவை சுற்றி வளைத்து பிடித்தனர். இச் சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.