/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லைரத்ததானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை
ADDED : அக் 02, 2011 12:58 AM
மதுரை :''ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் பொதுமக்களிடையே இல்லை,'' என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் தேசிய ரத்ததான விழா நடந்தது. தமிழ்நாடு ரத்ததான விழிப்புணர்வு தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியாவில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்தான் ரத்ததான இயக்கம் உள்ளதால், அங்கு ரத்தத்திற்கு தட்டுப்பாடு கிடையாது. டில்லியில் இல்லாததால், அங்கு மருத்துவ மனைகளில் அவசர காலகட்டங்களில்கூட ரத்தம் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 1.1 சதவீதம் ரத்ததானம் செய்தாலே ரத்தம் தட்டுப்பாடு வராது. ரத்தம் கொடுக்க கல்லூரி மாணவர்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் ரத்தம் பற்றிய முழுமையான தகவல்களை பெறுவதில் பின்தங்கியுள்ளனர். எனவே ரத்தவங்கிகளில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்த ஆண்டு (2010-11) அதிக
ரத்தம் தானம் செய்த நிறுவனங்கள் கவுரவிக்கப்பட்டன. முதல் மூன்று இடம் பெற்ற கிருஷ்ணன் கோயில் கலசலிங்கம் பல்கலை, கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் கல்லூரிக்கு விருதுகளும், சிறப்பு விருது சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுரிக்கும் வழங்கப்பட்டது. நான்சி எம்.எல்.ஏ., மருத்துவ இயக்குனர் ராஜசேகரன், டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார், செஞ்சிலுவை சங்க செயலாளர் ஜோஸ் பங்கேற்றனர்.


