வேலைக்கு செல்வோருக்கு அடி, உதை : தெலுங்கானாவில் இந்தக் கூத்து
வேலைக்கு செல்வோருக்கு அடி, உதை : தெலுங்கானாவில் இந்தக் கூத்து
வேலைக்கு செல்வோருக்கு அடி, உதை : தெலுங்கானாவில் இந்தக் கூத்து

ஐதராபாத் : பணிக்கு செல்லும் ஊழியர்கள் மீது, தெலுங்கானா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்துவதை தடுக்க, பாதுகாப்பை பலப்படுத்தும்படி, முதல்வர் கிரண்குமார் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் மீது, தெலுங்கானா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தாக்குதல்கள் நடப்பதை தடுக்க, பாதுகாப்பை அதிகரிக்கும்படி முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டார். உயர் போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். பின், ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா பகுதிகளிலுள்ள, முக்கிய அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், சுரங்க நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில்,தெலுங்கானா பகுதியில் பல்வேறு இடங்களில், நேற்று சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ., ராமா ராவ், உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ஜனாதிபதி ஆட்சி வருமா? தெலுங்கானா போராட்டத்தின் காரணமாக, ஆந்திராவில், சட்டம் - ஒழுங்கு நிலை முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, மாநில மனித உரிமைகள் கவுன்சில் தலைவரும், வழக்கறிஞருமான முப்பாலா சுப்பாராவ் வலியுறுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா : ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரி, தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க் கள் 32 பேர், தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர். தங்கள் ராஜினாமா கடிதங்களை நேற்று சட்டசபை செயலர் ராஜா சதாராமிடம் அளித்தனர். முன்னதாக, கடந்த ஜூலை மாதம், இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். ஆனால், சபாநாயகர், அவர்களது ராஜினாமா கடிதங்களை நிராகரித்தார்.