ADDED : ஜூலை 31, 2011 03:08 AM
செஞ்சி : கெடார் அடுத்த சிறுவாலையைசேர்ந்தவர் நாகப்பன் நேற்று முன் தினம் இரவு வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார்.
அதிகாலை 2.30 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த இரண்டரை பவுன் தங்க நகையை திருடி சென்றனர்.அரும்புலி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் நேற்று முன் தினம் தனது மனைவி மலர் கொடியுடன் வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கினார். அதிகாலை 3.20 மணிக்கு மர்ம நபர்கள் மலர்கொடியின் கழுத்தில் இருந்த 6 பவுன் எடையுள்ள இரு செயின்களை திருடி சென்றனர். இரு இடங்களிலும் திருட்டு போன நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும்.