/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவுவீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு
வீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு
வீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு
வீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 22, 2011 01:17 AM
திருப்பூர் : மாத தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி, மோசடி செய்த, திருச்செங்கோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது திருப்பூர் எஸ்.பி.,யிடம், 'காட்மா' சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) நிர்வாகிகள், திருப்பூர் எஸ்.பி.,பாலகிருஷ்ணனிடம் நேற்று மனு அளித்தனர்.
அம்மனுவில், 'திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள சரஸ்வதி நகரில் மாத தவணையில் வீட்டுமனை விற்க உள்ளதாக தெரிவித்தனர். அதை நம்பி, கோவை பீளமேடு, மசக்காளிபாளையம் பகுதிகளை சேர்ந்த 38 பேர், தலா இரண்டு வீட்டுமனைகளுக்கு, உரிமையாளர்கள் பொன்னுசாமி மற்றும் தனசேகரன், ராஜா ஆகியோரிடம் மாத தவணை செலுத்தினோம்.கடந்த 2006 செப்., முதல் 2009 ஆக., வரை, தலா ஒரு வீட்டுமனைக்கு 39 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு, ரசீது பெற்றுக்கொண்டோம். திட்டத்தில் சேரும்போது, 39 ஆயிரம் ரூபாய் செலுத்தியதும், கிரையம் செய்து தரப்படும் என ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.பணம் செலுத்தி இரண்டு ஆண்டுகளாகியும், ஒப்பந்தப்படி, வீட்டுமனை திட்டத்தில் பணம் கட்டியவர்களுக்கு வீட்டுமனையை கிரையம் செய்து தராமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, 2.69 கோடி ரூபாய் மதிப்புள்ள 69 வீட்டுமனைகளை, உரியவர்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.'காட்மா' தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:திருச்செங்கோட்டை சேர்ந்த பொன்னுசாமி மற்றும் சிலர், பொங்கலூரில் சரஸ்வதி நகர் என்ற பெயரில் 6,000 வீட்டுமனை பிரித்து மாத தவணையில் விற்பனை செய்வதாக கூறினர். அதை நம்பி, பணம் கட்டினோம். இரண்டு ஆண்டுகள் பணம் செலுத்தி, உரிய ரசீதுகள் வைத்துள்ளோம். இரண்டு ஆண்டுகளாக வீட்டுமனைகளை கிரையம் செய்து தர மறுத்து வருகின்றனர்.எங்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி, இவர்களிடம் வீட்டுமனைகளுக்கு மாத தவணை செலுத்தி, மூன்றாயிரம் பேர் வீட்டுமனை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் புகார் தெரிவித்ததையடுத்து, திருப்பூர் எஸ்.பி.,க்கு மனு அனுப்பப்பட்டது. எஸ்.பி., உத்தரவிட்டும், நீண்ட இழுபறிக்கு பின், அவினாசிபாளையம் போலீசார் ஆக., 31ம் தேதி, அம்மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருச்செங்கோட்டை சேர்ந்த பொன்னுசாமி, திருச்செங்கோடு அ.தி.மு.க., நிர்வாகியாக உள்ளார். அவரது மனைவி, அ.தி.மு.க., நகராட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர், என்று கூறினார்.