/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செங்கல் சூளை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்'செங்கல் சூளை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்'
செங்கல் சூளை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்'
செங்கல் சூளை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்'
செங்கல் சூளை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்'
ADDED : செப் 22, 2011 12:40 AM
தென்காசி : 'செங்கல் சூளை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்' என
அத்தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசியில் சக்தி
செங்கல்சூளை தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஐஎன்டியுசி மாநில பொது செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.
ஏஐடியுசி மாநில செயலாளர் மணி முன்னிலை வகித்தார். ஐஎன்டியுசி மாவட்ட
பொறுப்பாளர் சுடலைமுத்து வரவேற்றார். சக்தி செங்கல்சூளை தொழிலாளர் சங்க
நிர்வாகிகள் குமார், மணி, முருகன், ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் மற்றும் பலர்
பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: செங்கல்சூளை
தொழிலாளர்களுக்கு முன் பணம் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசு
தலையிட்டு நியாயமான முன் பண தொகையை நிர்ணயித்து தொழிலாளர்களுக்கு வழங்கிட
வேண்டும். கூலி ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். பணியிட வசதிகளை மேம்படுத்த
வேண்டும். செங்கல்சூளை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு நபார்டு பாங்க் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கிட
வேண்டும். பாங்க் மூலமாக நலவாரிய திட்ட நிதியுதவியினை பட்டுவாடா செய்திட
வேண்டும். இடம் பெயரும் தொழிலாளர்களுக்கான மாவட்ட வழிகாட்டும் மையங்கள்
திறக்க வேண்டும். தொழிலாளர் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.