ADDED : செப் 21, 2011 12:12 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்சங்க (சி.ஐ.டி.யு.,)
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர் அபூபக்கர் தலைமையில்
நடந்தது.திருப்பூரில் உள்ள வளர்மதி ரேஷன் கடைகளில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பொதுமக்கள் நீண்டநேரம்
காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் அளவையாளர்
நியமிக்க வேண்டும்.ரேஷன் பொருட்கள் குறைவாக
ஒதுக்கப்படுவதால், பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்னை
ஏற்படுகிறது; மண்டல வினியோக மையத்தில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனைத்து
பொருட்களும் முழு ஒதுக்கீடு செய்ய வேண்டும், என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க செயலாளர் சந்திரன், மாநில
துணை தலைவர் சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.