உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும்?: எலான் மஸ்க் பகிர்ந்த 'ஏஐ' வீடியோ
உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும்?: எலான் மஸ்க் பகிர்ந்த 'ஏஐ' வீடியோ
உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும்?: எலான் மஸ்க் பகிர்ந்த 'ஏஐ' வீடியோ
UPDATED : ஜூலை 22, 2024 02:05 PM
ADDED : ஜூலை 22, 2024 01:45 PM

புதுடில்லி: பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் 'ஏ.ஐ' தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் 'ஏ.ஐ' தொழில்நுட்பம் தற்போது பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் செய்ய நினைப்பதை கற்பனையுடன் தொழில்நுட்ப உதவியால் செய்வதே இதன் முக்கிய நோக்கம். உதாரணமாக ஒரு சிறுவனின் புகைப்படத்தை வைத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருப்பார் என 'ஏ.ஐ' மூலம் அறியலாம்.
அப்படியான 'ஏ.ஐ'யை பயன்படுத்தி உலக பணக்காரர்களில் ஒருவரும், 'எக்ஸ்' வலைதள நிறுவனருமான எலான் மஸ்க், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பேஷன் ஷோ பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஜூகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹார்ஸ், சீன அதிபர் ஜி ஜிங்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் பிரான்சிஸ் என வரிசையாக நடந்து வருகின்றனர்.
கடைசியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். இது தற்போது வைரலாகியுள்ளது.