/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரம் மாணவர்களுக்கு "லேப் டாப்'மாவட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரம் மாணவர்களுக்கு "லேப் டாப்'
மாவட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரம் மாணவர்களுக்கு "லேப் டாப்'
மாவட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரம் மாணவர்களுக்கு "லேப் டாப்'
மாவட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரம் மாணவர்களுக்கு "லேப் டாப்'
ADDED : செப் 20, 2011 01:57 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரத்து 655 மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படுமென அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.விழுப்புரத்தில் நடந்த அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது:ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றுப்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றவுடன் கையெழுத்தான 7 திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் முதலிடம் பெற்றது. முதல்வர் ஜெ., உத்தரவின்படி மிக்சி, கிரைண்டர், பேன், தாலிக்கு தங்கம் ஆகியவை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வழங்கப்படுகின்றன. மக்கள் வளமான வாழ்க்கையை பெற வேண்டும் என்பதே இந்த அரசின் இலக்கு. தாலிக்கு வழங்கப்படும் தங்கம் இந்தியன் ரிசர்வ் பாங்க் மூலம் வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் காண வழி வகுக்கும்.விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 375 பேருக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிது. நம் மாவட்டத்தில் தற்போது தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் வளர்க்கப்பட்ட பெண் குழந்தை தற்போது இன்ஜினியரிங் படித்து வருகிறது.மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச'லேப்டாப்' மூலம் வரும் 5 ஆண்டுகளில் உலக அள வில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும். மாவட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரத்து 655 மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும். கல்வித் தரத்தை உயர்த்த 'அறிவு பூங்கா' துவங்கப்படும். சாட்டிலைட் மூலமும் மாணவர்கள் வகுப்பிலிருந்தே கல்வி கற்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
தற்போது ஒரே ஆண்டில் 56 ஆசிரிய, ஆசிரியைகள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் ஆசிரியர் அல்லாத 5,000 பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும் 233 பள்ளிகளை தரம் உயர்த்த 260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.


