Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஆட்டோ கட்டணத்திற்கு புதிய செயலி; 3 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு

ஆட்டோ கட்டணத்திற்கு புதிய செயலி; 3 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு

ஆட்டோ கட்டணத்திற்கு புதிய செயலி; 3 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு

ஆட்டோ கட்டணத்திற்கு புதிய செயலி; 3 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு

ADDED : செப் 17, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
சென்னை : ஆட்டோக்களுக்கு கட்டணம் உள்ளிட்ட இதர சேவை பெற, புதிய மொபைல் போன் செயலியை உருவாக்குவதில், அரசு துறைகளிடையே இழுபறி நீடிக்கிறது.

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, கடந்த 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய்; காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய்; இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து, போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த கட்டணம் நிர்ணயித்து, 12 ஆண்டுகள் ஆகி விட்டன. அரசு அறிவித்தப்படி, 'டிஜிட்டல் மீட்டர்'களும் வழங்கப்படவில்லை. எரிபொருள் விலைக்கு ஏற்ப, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டியும் அமைக்கப்படவில்லை.

நிர்ணயம் அதனால், ஆட்டோக்களில் ஆரம்ப கட்டணமே, 100 ரூபாய் என வசூலிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய ஆட்டோ செயலி அறிமுகம் செய்யப்படும் என, போக்குவரத்து ஆணையரகம், மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது; இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் ஹுசேன் கூறியதாவது: புதிய ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து, அதை புதிய செயலியில் பதிவிறக்கம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, போக்குவரத்து துறை அறிவிதத்து. ஆரம்பத்தில், இந்த செயலியை போக்குவரத்து துறை கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டது.

பயன்பாடு பின், தொழிலாளர் நலத் துறை சார்பில் இப்பணி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை புதிய செயலி பயன்பாட்டிற்கு வரவில்லை. இனியும் தாமதிக்காமல், ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து, புதிய செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்டோக்களுக்கான புதிய செயலியை உருவாக்கும் பணியை, தற்போது தொழிலாளர் நலத் துறை செய்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us