/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி விற்பனை துவக்கம்பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி விற்பனை துவக்கம்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி விற்பனை துவக்கம்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி விற்பனை துவக்கம்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி விற்பனை துவக்கம்
ADDED : செப் 20, 2011 01:26 AM
கும்பகோணம்: கும்பகோணம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
கும்பகோணம் பெரியதெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான பூம்புகார் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நவராத்திரி முன்னிட்டு பஞ்சலோகம், பித்தளை, களிமண், பேப்பர் கூழ், வெள்ளெருக்கு, மார்பிள் பவுடர், அலாய் மெட்டல் போன்ற மூலப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பலவித சுவாமி சிலைகள் மற்றும் கொலு வைப்பதற்கு தேவையான தசாவதார செட், கல்யாணசெட், தலையாட்டி பொம்மைகள், காமதேனு, பசுவும் கன்றும், சிவன் பார்வதி, மீனாட்சி அம்மன், கஜலெட்சுமி, அஷ்டலெட்சுமி, ஹயக்கீரிவர், கிருஷ்ண லீலைகள், வெண்ணெய் கிருஷ்ணர் மற்றும் எணண்ணற்ற பொம்மைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் உள்ளன. குறைந்தது 15 ரூபாயிலிருந்து அதிகமாக 1,600 ரூபாய் வரை கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. கொலு பொம்மை மற்றும் பரிசுப்பொருட்களுக்கு நவராத்திரி கண்காட்சி சிறப்பு விற்பனையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி 10 சதவீதம் வழங்கப்படுகிறது. பூம்புகார் லையத்தில் உயர்தர பித்தளை விளக்கு, தஞ்சை கலைத்தட்டு, கருங்கல் சுவாமி சிலைகள், பூஜை பொருள், நெட்டி மாடல், தேர் மாடல், மொராதாபாத் பித்தளை பரிசு பொருள், சகரான்பூர் மர வேலைப்பாடுடன் கூடிய பரிசு பொருள் மற்றும் ஐம்பொன் நகை வகை மற்றும் சந்தன சாம்பிராணி பத்திகள், இன்னும் எண்ணற்ற கலை நயம்மிக்க பரிசுப் பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் பூம்புகார் விற்பனை லையத்தில் தொடங்கியுள்ள நவராத்திரி கொலு கண்காட்சி அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு ர்ணயிக்கப்பட்டுள்ளது.


