ADDED : செப் 20, 2011 12:55 AM
ஓசூர்: ஓசூர் அருகே லாரி மீது கார் மோதியதில், சாப்ஃட் வேர் இன்ஜினியர் பரிதாபமாக பலியானார்.
பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில், சாப்ட்ஃவேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர் அரிஷ்குமார் (33). இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதை பார்ப்பதற்காக, நெல்லைக்கு நண்பர்கள் சரவணன், மற்றொரு சரவணன் ஆகியோருடன் அரிஷ்குமார் காரில் சென்றார். அங்கு மனைவியையும், குழந்தையையும் பார்த்து விட்டு நேற்று காரில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அரிஷ்குமார் ஓட்டினார். ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி அருகே வந்த போது, முன்னால் கல் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில், அரிஷ்குமார் சம்பவ இடத்தில் பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ஹட்கோ போலீஸார் விசாரிக்கின்றனர்.


