/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/போஸ்ட்கார்டு மூலம் ஓட்டு சேகரிப்பு ஆனைகுளம் பகுதியில் பரபரப்புபோஸ்ட்கார்டு மூலம் ஓட்டு சேகரிப்பு ஆனைகுளம் பகுதியில் பரபரப்பு
போஸ்ட்கார்டு மூலம் ஓட்டு சேகரிப்பு ஆனைகுளம் பகுதியில் பரபரப்பு
போஸ்ட்கார்டு மூலம் ஓட்டு சேகரிப்பு ஆனைகுளம் பகுதியில் பரபரப்பு
போஸ்ட்கார்டு மூலம் ஓட்டு சேகரிப்பு ஆனைகுளம் பகுதியில் பரபரப்பு
குற்றாலம் : நெல்லை மாவட்டம் ஆனைகுளம் பஞ்., தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட உள்ள கருப்பசாமி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன் போஸ்ட் கார்டு மூலம் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி புதிய தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பணியில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இன்னும் தேர்தல் தேதி கூட அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகா ஆனைகுளம் பஞ்., தலைவர் பதவிக்கு கருப்பசாமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்து இப்போதே ஒவ்வொரு வீட்டிற்கும் போஸ்ட் கார்டு மூலம் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதில், 'எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தேவையான அடிப்படை வசதி செய்து தருவேன். அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட உறுதுணை புரிவேன்' என்று உறுதிமொழி அளித்துள்ளார். போஸ்ட்கார்டு மூலம் தபால் அனுப்பி நூதன முறையில் ஓட்டு சேகரிப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


