/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் எலும்பு தேய்மானம்: தஞ்சையில் சென்னை டாக்டர் பேட்டிமிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் எலும்பு தேய்மானம்: தஞ்சையில் சென்னை டாக்டர் பேட்டி
மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் எலும்பு தேய்மானம்: தஞ்சையில் சென்னை டாக்டர் பேட்டி
மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் எலும்பு தேய்மானம்: தஞ்சையில் சென்னை டாக்டர் பேட்டி
மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் எலும்பு தேய்மானம்: தஞ்சையில் சென்னை டாக்டர் பேட்டி
ADDED : செப் 19, 2011 12:36 AM
தஞ்சாவூர்: ''மனிதனின் ஆயுட்காலம் அதிகமாகிவிட்ட நிலையில், எலும்பு தேய்மான மற்றும் முதுகுவலி பாதிப்பு சமீபத்தில் மிகப்பெரியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது,'' என்று சென்னை 'அப்பல்லோ' எலும்பு தேய்மான சிகிச்சை நிபுணர் டாக்டர் கோசிகன் கூறினார். எலும்பு தேய்மானம் மற்றும் கீழ் முதுகுவலி சிகிச்சையில் நவீன முன்னேற்றங்கள் குறித்து, சென்னை அப்பல்லோ எலும்பு தேய்மான சிகிச்சை நிபுணர் டாக்டர் கோசிகன், தஞ்சையில் நேற்று கூறியதாவது: சாதாரணமாக கீழே விழுந்தாலே எலும்புகள் உடைத்து விடக்கூடிய அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு தேய்மானம் எனப்படுகிறது. பொதுவாக, 25 வயதில் எலும்புகள் வலுவாக இருக்கும். சுமார் 35 வயதுக்கு பிறகு எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கிறது. 50 வயதுக்கு பின் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும், ஆண்களில் எட்டில் ஒருவருக்கும் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
ஆண்களை விட பெண்களே இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கின்றனர். எலும்பு அடர்த்தியை தொடர்ந்து பாதுகாக்க ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன்கள் மிகவும் அவசியம். மாதவிலக்குக்கு பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. அப்போது எலும்பு அடர்த்தி வேகமாக குறைய ஆரம்பிக்கும். கர்ப்பபை மற்றும் சினைப்பைகளை நீக்குவதாலும் இப்பிரச்னை ஏற்படுகிறது. உணவுக்கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சிகளின் மூலம் இப்பிரச்னையை தடுக்கலாம். சிகரெட் பிடிப்பதாலும் இப்பிரச்னை ஏற்படுகிறது. பெண்கள் சிகரெட் பிடித்தால், ஆண்களை விட அதிகளவு பாதிக்கப்படுவர். வயதானவர்களிடம் இந்நோய் அதிகம் காணப்பட்டாலும், தற்போது இளவயதினரிடம் காணப்படுகிறது. மனிதனின் ஆயுட்காலம் அதிகமாகிவிட்ட நிலையில், இந்நோய் பாதிப்பு சமீபத்தில் மிகப்பெரியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இடுப்பு, மணிக்கட்டு, முதுகுத்தண்டு ஆகிய பகுதிகளிலேயே அதிகளவு எலும்பு தேய்வினால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சிலவேளைகளில் வேறு இடங்களிலும் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு இருமல், தும்மல் ஏற்படும் போதுகூட விலா கூடு மற்றும் முதுகுத்தண்டு எலும்புகள் பாதிக்கப்படலாம். இருமம், தும்மல், மலம் கழிக்கும்போது எலும்புகளில் வலி ஏற்பட்டாலோ, சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியாத நிலை மற்றும் படுக்கையிலேயே சிறுநீர் கழித்தலோ உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். வேலை செய்யும்போது சரியான நிலையில் அமர்ந்து செய்தல், தேவையற்ற நிலையில் உடலை வளைத்தல், நீட்டல், மடக்குதல் போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும். கனமான பொருட்களை தூக்கும்போது கால்களை நன்றாக அகற்றி வைத்து, கவனமாக தூக்க வேண்டும். தசைப்பகுதிகளை வலுப்படுத்தும் மிதமான உடற்பயிற்சி எலும்புமுறிவு மற்றும் முதுகு வலியை தவிர்க்கும். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் எலும்பு தேய்மானம் மற்றும் முதுகு வலிக்காக பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, சென்னை அப்போலா மருத்துவமனை பி.ஆர்.ஓ., பாலபாஸ்கர ராவ் உடனிருந்தார்.