/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் கோர்ட் "ஜப்தி'யால் முடங்கிய 20 அரசுபஸ்களை மீட்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்நெல்லையில் கோர்ட் "ஜப்தி'யால் முடங்கிய 20 அரசுபஸ்களை மீட்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்
நெல்லையில் கோர்ட் "ஜப்தி'யால் முடங்கிய 20 அரசுபஸ்களை மீட்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்
நெல்லையில் கோர்ட் "ஜப்தி'யால் முடங்கிய 20 அரசுபஸ்களை மீட்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்
நெல்லையில் கோர்ட் "ஜப்தி'யால் முடங்கிய 20 அரசுபஸ்களை மீட்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2011 02:51 AM
திருநெல்வேலி : நெல்லை மண்டலத்தில் 1.10 கோடி ரூபாய் ஜப்தி தொகையால் முடங்கிய அரசு பஸ்களை மீட்க போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியது.போக்குவரத்து துறைத்தலைவர் நெல்லை கோட்ட அலுவலகத்திற்கு வந்தார்.
சிஐடியு., போக்குவரத்து தொழிலாளர் சங்க நெல்லை மண்டல தலைவர் முத்துக்கிருஷ்ணன், பொதுச்செயலாளர் பெருமாள், நாகர்கோவில் மண்டல செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் போக்குவரத்து துறைத்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு விபரம்:கடந்த திமுக அரசு தொ.மு.ச., தான் அங்கீகாரம் பெற்ற சங்கம் என பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். நெல்லை மண்டலத்தில் கோர்ட் ஜப்தி காரணமாக 20 பஸ்கள் இயக்கப்படாமல் 3 மாதங்களுக்கு மேல் முடங்கியுள்ளது. ஜப்தி தொகை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் உள்ளது. பஸ்களை விடுவிக்க வேண்டும்.திசையன்விளை, செங்கோட்டை, கோவில்பட்டி பணிமனைகளில் புதிதாக பணிநியமனம் பெற்ற சேமநல டிரைவர், கண்டக்டர்கள் 3 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை பணிநிரந்தரப்படுத்த வேண்டும். பின்னீட்டு ஊதியம் வழங்க வேண்டும்.கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வழித்தடங்களில் பஸ் இயக்க நேரங்கள் தனியாருக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளன. நேர மாற்றங்களை ரத்து செய்து 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நேரப்படி இயக்க வேண்டும். 500 தினக்கூலி டிரைவர்கள், கண்டக்டர்களை பணிநிரந்தரப்படுத்த வேண்டும். டிரைவர், கண்டக்டர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். தொழில்நுட்பம், அலுவலகப்பிரிவுகளுக்கு தகுந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும். உபகரண வசதி, பயிற்சி அளிக்க வேண்டும்.கடந்த கால ஒப்பந்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். சம்பள முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும். கேன்டீனில் உணவு, டீ தரமாக வழங்க வேண்டும். கேன்டீன் கமிட்டி அமைக்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளிகளுக்கு கிராஜூவிட்டி, வைப்புத்தொகை, கம்யூட்டேஷன் ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.