Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுரண்டையில் காங்.,விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுரண்டையில் காங்.,விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுரண்டையில் காங்.,விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுரண்டையில் காங்.,விருப்ப மனு

ADDED : செப் 16, 2011 01:50 AM


Google News

சுரண்டை : சுரண்டையில் காங்., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று துவங்கியது.

தொடர்ந்து 21ம் தேதி வரை மனு பெறப்படுகிறது. சுரண்டையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்.,கட்சியினர் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தனர். 18 வார்டுகளை கொண்ட சுரண்டை டவுன் பஞ்., சில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவி கோமதி பழனிநாடார் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து முதல் விருப்ப மனுவினை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடாரிடம் வழங்கினார். தொடர்ந்து தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஜெயராணி வள்ளிமுருகன் விருப்ப மனுவினை பெற்று பூர்த்தி செய்து தமிழ்நாடு காங்., பொதுக்குழு உறுப்பினர் கலைவேந்தன் சாமிநாதனிடம் வழங்கினார். மூன்றாவதாக தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து கனகராணி விருப்ப மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து 18 வார்டுகளிலும் கவுன்சிலர் பதவிக்கு ஏராளமான காங்., கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடார் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்.,பொதுக்குழு உறுப்பினர் கலைவேந்தன் சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா, பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நேற்று முதல் துவங்கியுள்ள விருப்ப மனு தாக்கல் வரும் 21ம் தேதி வரை தினமும் கட்சி தலைமை அலுவலகமான கவிதா பால்பண்ணையில் நடைபெறும் என மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடார், தமிழ்நாடு காங்.,பொதுக்குழு உறுப்பினர் கலைவேந்தன் சாமிநாதன் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us