ADDED : செப் 15, 2011 10:53 PM
புதுச்சேரி:கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகள் வேளாண் அறிவியல் மைய விவசாய பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
களப் பயணத்தை பள்ளி முதல்வர் நடராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
வேளாண் அறிவியல் மைய முதல்வர் ராமமூர்த்தி, ரகுநாதன், சந்திராதரன், பாலாஜி
ஆகியோர், மாணவிகளுக்கு தோட்டக்கலை நுணுக்கங்கள், மூலிகை செடி வளர்ப்பு
குறித்து பயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் ஆசிரியை அபிராமி, வேலு உள்பட
பலர் கலந்து கொண்டனர். களப்பயணத்திற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் நளினா
ஏற்பாடு செய்திருந்தார். மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளி: மணிமேகலை அரசு
மேனிலைப் பள்ளி மாணவிகள் தொல்பொருள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
களப்பயணத்தை பள்ளி முதல்வர் சுமதி துவக்கி வைத்தார். இதில் பழம்
பொருட்களின் வரலாற்று பின்னணி குறித்து மாணவர்களுக்கு
எடுத்துரைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் விரிவுரையாளர் மனோகரி, அறிவழகன் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.