/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பணி நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டம்பணி நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
பணி நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
பணி நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
பணி நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 13, 2011 01:56 AM
நாமக்கல்: தேர்வு செய்யப்பட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற அனுமதி வழங்கக்கோரி, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பெரியசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள, 15 யூனியனில், 47 பணிகள் தேர்வு செய்யப்பட்டன. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியை, ஒன்றிய இன்ஜினியர்கள், பி.டி.ஓ.,க்கள் நேரடியாக அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து பணிகளை செய்யலாம் என, மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளனர். எனினும், அந்தப் பணிகளுக்கு தனி அலுவலர் ஆய்வறிக்கை எதுவும் வழங்கவில்லை. அதற்காக நினைவூட்டுக் கடிதம், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் தனி அலுவலருக்கு வழங்கப்பட்டது. எனினும், தனி அலுவலர் பதில் எதுவும் வழங்கவில்லை. அதனால், திட்டப் பணிகள் துவங்கப்படாத நிலையில் உள்ளது. அதைக் கண்டித்து, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பெரியசாமி தலைமையிலான கவுன்சிலர்கள் சுப்ரமணி, பத்மாவதி, பானுமதி ஆகியோர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, சேர்மன் பெரியசாமி தெரிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.