/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஓட்டு இயந்திர பாதுகாப்பில் சிக்கல் : உள்ளாட்சிகள் தயக்கம்ஓட்டு இயந்திர பாதுகாப்பில் சிக்கல் : உள்ளாட்சிகள் தயக்கம்
ஓட்டு இயந்திர பாதுகாப்பில் சிக்கல் : உள்ளாட்சிகள் தயக்கம்
ஓட்டு இயந்திர பாதுகாப்பில் சிக்கல் : உள்ளாட்சிகள் தயக்கம்
ஓட்டு இயந்திர பாதுகாப்பில் சிக்கல் : உள்ளாட்சிகள் தயக்கம்
ADDED : செப் 08, 2011 10:39 PM
விருதுநகர் : ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் சிக்கல் நிலவுவதால், இவற்றை பெறுவதில், உள்ளாட்சி அமைப்புகள் தயக்கம் காட்டுகின்றன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், கவுன்சிலர்களை தேர்வு செய்ய இரு ஓட்டுக்கள் பதிவாகும். இதற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன்படி 45 ஆயிரம் இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 'ஸ்டிராங்' அறை ஏற்படுத்தி, இயந்திரங்களை பாதுகாப்பதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிக்கல் உள்ளது. இதனால், இயந்திரங்களை, தேர்தல் நேரத்தில் எடுத்து கொள்வதாக, உள்ளாட்சி அமைப்புகள் கூறுகின்றன. இதுகுறித்து முடிவு எடுக்க முடியாமல், தமிழக தேர்தல் கமிஷன் திணறி வருகிறது.