/உள்ளூர் செய்திகள்/சென்னை/மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றிமனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி
மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி
மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி
மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி
ADDED : செப் 07, 2011 11:51 PM
சென்னை : டி.என்.பி.எஸ்.சி., உதவிப்பொறியாளர் நேர்முக தேர்வில், மனித நேய அறக்கட்டளையில் பயின்ற 134 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் வகையில், சைதை துரைச்சாமியின், மனிதநேய அறக்கட்டளை சார்பில், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.கடந்தாண்டு தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில், 661 உதவிபொறியாளர்களைத் தேர்ந்தேடுக்க எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்விற்கு சைதை துரைச்சாமியின் மனித நேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த, எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான நேர்காணல் பயிற்சி மனித நேய அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.அதன் பலனாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் ஊரக வளர்ச்சித்துறை பணிக்கு 65 பேர், நெடுஞ்சாலைத்துறை பணிக்கு 27 பேர், பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட நீர் ஆதாரத்துறை பணிக்கு 24 பேரும் மின்னியல் பணிக்கு 4 பேர், கட்டட பணிக்கு 3 பேர் மற்றும் இதர பணிகளுக்கு 11 பேரை சேர்த்து மொத்தம் 134 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 89 மாணவர்களும் 45 மாணவியரும் அடங்குவர்.