/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்
ADDED : செப் 04, 2011 02:22 AM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் தாசில்தாராக இருந்த ஜவகர் திண்டிவனம்
முத்திரைத் தாள் தாசில்தாராகவும், அங்கிருந்த ராஜேந்திரன் விழுப்புரம்
தாசில்தாராக மாற்றப்பட்டார்.
விழுப்புரம் நகர் புற நிலவரி தாசில்தாராக
இருந்த ஜோதி திண்டிவனம் தாசில்தாராகவும், திண்டிவனம் தாசில்தாராக இருந்த
தலைமலை செஞ்சி தாசில்தாராகவும், செஞ்சியில் பணி புரிந்த பரந்தாமன்
திண்டிவனம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தா ராக மாற்றப்பட்டார்.திண்டிவனம்
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயக்குமார் விழுப்புரம் நகர் புற நில
வரி தாசில் தாராகவும், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய ராஜேந்திரன்
உளுந்தூர்பேட்டை ஆதி திராவிட நல தனித் தாசில்தாராக மாற்றப்பட்டார்.
இங்கிருந்த தனி தாசில்தார் மார்க்கபந்து புதிய பதவியாக உருவாக்கப்பட்டுள்ள
கள்ளக்குறிச்சி வனத்திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.


