/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தேசிய அடையாள அட்டை ஃபோட்டோ எடுக்கும் பணி : ஆக.,26ல் துவக்கம்தேசிய அடையாள அட்டை ஃபோட்டோ எடுக்கும் பணி : ஆக.,26ல் துவக்கம்
தேசிய அடையாள அட்டை ஃபோட்டோ எடுக்கும் பணி : ஆக.,26ல் துவக்கம்
தேசிய அடையாள அட்டை ஃபோட்டோ எடுக்கும் பணி : ஆக.,26ல் துவக்கம்
தேசிய அடையாள அட்டை ஃபோட்டோ எடுக்கும் பணி : ஆக.,26ல் துவக்கம்
ADDED : ஆக 24, 2011 01:20 AM
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் வடவளனம் கிராமத்தில் தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி வரும் 26ம் தேதி நடக்கிறது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய குறிப்பிட்ட சில விபரங்களுடன் ஐந்து வயதில் அதற்கு மேலும் உள்ள நபர்களின் ஃபோட்டோ, 10 விரல் கை ரேகை மற்றும் கண் இமை ஆகியவற்றின் பதிவு இடம் பெற்றிருக்கும்.
தற்போது நெய்வேலிப்பட்டி, புலவன் காடு, வாரப்பூர், மணவிடுதி மற்றும் சம்பட்டிவிடுதி ஆகிய பகுதிகளில் தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி நடக்கிறது. வரும் 26ம் தேதி மூக்கம்பட்டி, குளவாய்பட்டி, இச்சடி, பெருங்கொண்டான் விடுதி, வடவளனம் ஆகிய கிராமங்களில் தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி நடக்கிறது. ஆகையால், இப்பகுதி பொதுமக்கள் ஃபோட்டோ எடுக்கும் முகாம்களுக்கு சென் று, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடுபடாமல் ஃபோட்டோ எடுத்துக்கொள்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


