இடுக்கியில் தொடரும் கனமழை: நிலச்சரிவுக்கு வாய்ப்பு என அச்சம்
இடுக்கியில் தொடரும் கனமழை: நிலச்சரிவுக்கு வாய்ப்பு என அச்சம்
இடுக்கியில் தொடரும் கனமழை: நிலச்சரிவுக்கு வாய்ப்பு என அச்சம்

அணை திறப்பு
கல்லார்குட்டி, மலங்கரா, பாம்ப்ளா ஆகிய அணைகள் திறக்கப்பட்ட நிலையில் பொன்முடி அணை நேற்று மாலை திறக்கப்பட்டது. அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பன்னியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உயர்வு
இடுக்கி அணையில் நீர்மட்டம் கடந்த இரு நாட்களில் 5.43 அடி உயர்ந்தது. 554 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 200. 21 அடியாக இருந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 179.60 ஆக இருந்தது. தேவிகுளம் தாலுகாவில் 2, இடுக்கி தாலுகாவில் 3 என 5 நிவாரண முகாம்களில் 123 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாடு
மாவட்டத்தில் 'ரெட் அலர்ட்' தொடர்வதால் தோட்டப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் தேயிலை, ஏலம் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லாததால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணியுடன் சராசரி மழை 96.52 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக மூணாறில் 100.80 மி.மீ., மழை பெய்தது.