350 வெளிமாநில மதுபாட்டில்கடத்தல்: 2 பேர் கைது
350 வெளிமாநில மதுபாட்டில்கடத்தல்: 2 பேர் கைது
350 வெளிமாநில மதுபாட்டில்கடத்தல்: 2 பேர் கைது
ADDED : ஆக 23, 2011 04:40 AM
திருச்சி: பெங்களூரிலிருந்து, ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட, 350 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்த, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க போலீசார், இருவரை கைது செய்தனர்.பெங்களூரிலிருந்து ஆம்னி பஸ்களில், வெளிமாநில மதுபாட்டில் திருச்சிக்கு கடத்தப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை 11 மணிக்கு, பெங்களூரிலிருந்து திருச்சி வந்த, தனியார் டிராவல்சுக்கு சொந்தமான ஆம்னி பஸ்சை, போலீசார் சோதனையிட்டனர். பஸ்சிலிருந்த பெயின்ட் பேரல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு சோதனையிட்டதில், ஒவ்வொரு பேரல்களிலும் தலா, 50 மதுபான பாட்டில் வீதம் ஏழு பேரல்களில், 350 வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தன.
ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில மதுபாட்டில்களை, பறிமுதல் செய்த, மாநகர மதுவிலக்கு போலீசார், முசிறியைச் சேர்ந்த மகாதேவன், 30, வினாயகமூர்த்தி, 32, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம், கடத்தலில் முக்கிய புள்ளிகள் யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என, விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, பெங்களூரிலிருந்து, வெளிமாநில தரமற்ற மதுபாட்டில்களை வாங்கி வரும் சிலர், அவற்றை திருச்சி மாநகரில் டாஸ்மாக் பார்களில் இரவு 10 மணிக்கு மேல், அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.சட்டவிரோதமாக விற்கப்படும் இந்த மதுவால், 'குடிமகன்'களின் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அவற்றின் மீதும் மாநகர மதுவிலக்கு போலீசார் கவனம் செலுத்துவது அவசியம்.