மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி
மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி
மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி
ADDED : ஆக 21, 2011 02:11 AM
தொட்டியம்: தொட்டியம், தோளூர்ப்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த புத்தாக்க பயிற்சி முகாமிற்கு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாதுரை வரவேற்றார். கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்து துவங்கி வைத்தார். இப்பயிற்சி முகாமிற்கு சாரநாதன் கல்லூரி இயக்குனர் டாக்டர் தேவநாதன் மற்றும் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஒழுக்கத்தையும் கல்வி கற்றலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆட்டோமொபைல் துறை பேராசிரியர் தினகரன் நன்றி கூறினார்.