ADDED : ஆக 09, 2011 01:25 AM
தேனி : தேனி பங்களாமேட்டை சேர்ந்தவர் சிற்பி(36).
இவரது மனைவி ஜானகி. திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் சிற்பி நோயால் பாதிக்கப்பட்டதால், மனைவி ஜானகி இடப்பத்திரம், 35 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தனியே சென்று விட்டார். இது குறித்து சிற்பி தேனி போலீசில் புகார் செய்தார். தன் மனைவி நகை, பத்திரத்துடன் சென்று விட்டதாவும், தன்னுடன் வாழ மறுக்கும் மனைவி மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


