கங்கை நதியை இழிவுபடுத்திய ஆஸி., வானொலி மன்னிப்பு
கங்கை நதியை இழிவுபடுத்திய ஆஸி., வானொலி மன்னிப்பு
கங்கை நதியை இழிவுபடுத்திய ஆஸி., வானொலி மன்னிப்பு
ADDED : ஆக 05, 2011 10:39 PM
மெல்போர்ன் : இந்தியாவையும், கங்கை நதியையும் இழிவுபடுத்திய ஆஸ்திரேலிய வானொலி நிலையம், மன்னிப்புக் கேட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'டுடே எப்.எம்.,' என்ற வானொலி நிலையத்தில் சமீபத்தில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியில், தொகுப்பாளர் கைல் சேண்டிலேண்ட்ஸ் என்பவர், இந்தியா ஒரு மலக் குழி, கங்கை நதி ஒரு சாக்கடை என, இழிவாக விமர்சித்திருந்தார்.
இதனால், ஆஸ்திரேலிய இந்தியர்கள் கவுன்சில், குறிப்பிட்ட வானொலி நிலையமும், தொகுப்பாளரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, நேற்று அந்த வானொலி நிலையத்தின் மன்னிப்பு அறிக்கையை, கவுன்சில் தலைவர் யது சிங் நேற்று வெளியிட்டார். அதில்,'நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் இந்தியர்களை நேசிப்பவன். கங்கை நதி மாசுபட்டுள்ளதைக் குறிக்கும் விதத்தில்தான் நான் அதை சாக்கடை என்று சொன்னேன். அதேநேரம் அது புனித நதியாக மதிக்கப்படுவது எனக்குத் தெரியாது' என, கைல் சேண்டிலேண்ட் தெரிவித்திருந்தார். வானொலி நிலையமும் அதே கடிதத்தில் மன்னிப்புக் கோரியுள்ளது.