மாணவியை கேலி செய்த தகராறில் ஒருவர் கொலை: இருவர் கைது
மாணவியை கேலி செய்த தகராறில் ஒருவர் கொலை: இருவர் கைது
மாணவியை கேலி செய்த தகராறில் ஒருவர் கொலை: இருவர் கைது
ADDED : ஆக 03, 2011 01:30 AM
பூவந்தி : மாணவியை கேலி செய்ததை தட்டிக்கேட்டதால், ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை அருகேயுள்ள படமாத்தூரைச் சேர்ந்த மாணவி சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிவகங்கையில் பிளஸ் 2 படிக்கிறார். இதே ஊரைச்சேர்ந்த மாணவர் குணா சிவகங்கை அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். குணா, மாணவி சாந்தியை அடிக்கடி கேலி செய்துள்ளார்.பெற்றோர் இல்லாத சாந்தி, தனது சித்தப்பா முருகன் (37), ராஜகோபால் (28) ஆகியோரிடம் கூறியுள்ளார். இவர்கள் குணாவை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் முருகன், ராஜகோபால் வீட்டிற்கு குணாவின் தாய்மாமன் வேலாங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (30) அடியாட்களோடு சென்று மிரட்டியுள்ளார். இதில் தகராறு ஏற்படவே முருகன், ராஜகோபாலை மணிகண்டன் கத்தியால் குத்தியுள்ளார். கத்தியை பறித்து, இருவரும் மணிகண்டனை குத்தியுள்ளனர். படுகாயமடைந்த மணிகண்டன் சிவகங்கை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். முருகன், ராஜகோபால் ஆகியோரை பூவந்தி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபகுமார் கைது செய்தார்.