ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
அவிநாசி : அவிநாசி வழியே சென்ற ஆம்னி பஸ்களில் ஆர்.டி.ஓ., ஆய்வு நடத்தினார்.அனைத்து ஆம்னி பஸ்களிலும் அவசர கால வழி ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பஸ்களில் அவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அவிநாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன், திருப்பூர் ஆர்.டி.ஓ., ரஜினிகாந்த் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர்கள் சித்ரா, சுரேந்திரகுமார், விமலா ஆகி யோர் சோதனையிட்டனர்.ஆர்.டி.ஓ., கூறுகையில், 'அனைத்து ஆம்னி பஸ்களிலும் அவசர கால வழி அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காத பஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மது குடித்து விட்டு டிரைவர்கள் வாகனத்தை இயக்குகிறார்களா என்பது குறித்தும் சோதனையிடப்பட்டது,'' என்றார்.