ADDED : ஜூலை 29, 2011 11:17 PM
ஊட்டி : சமச்சீர் கல்வி எதிரொலியையடுத்து பள்ளிகளுக்கு நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்த தி.மு.க., அழைப்பு விடுத்தது.
இதையடுத்து மாவட் டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்டத்தில் வழக்கம் போல் எவ்வித பாதிப்பில்லாமல் பள்ளிகள் இயங்கியதாக கல்விதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.