/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குடிநீர் பிரச்னையை தீர்க்க மாதர் சங்க மாநாடு கோரிக்கைகுடிநீர் பிரச்னையை தீர்க்க மாதர் சங்க மாநாடு கோரிக்கை
குடிநீர் பிரச்னையை தீர்க்க மாதர் சங்க மாநாடு கோரிக்கை
குடிநீர் பிரச்னையை தீர்க்க மாதர் சங்க மாநாடு கோரிக்கை
குடிநீர் பிரச்னையை தீர்க்க மாதர் சங்க மாநாடு கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2011 12:29 AM
திண்டிவனம் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்ட மாநாடு திண்டிவனத்தில் நடந்தது.
திண்டிவனம் பி.கே., திருமண நிலையத்தில் நடந்த மாநாட்டிற்கு வட்ட தலைவர் தமிழ்முரசு தலைமை தாங்கினார். செயலாளர் சரஸ்வதி வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சக்தி, செயலாளர் கீதா பேசினர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தில்லையாடி வள்ளியம்மை நகர் எதிரே நகராட்சி குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும். ஒலக்கூர் ஒன்றியம் மேல்பாக்கம், கீழ்சேவூர் கிராமங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். பாஞ்சாலம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் தொழுநோயாளிகளுக்கு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.