/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பிரானூரில் 31ம் தேதி பொறியாளர்கள் சங்க மாநாடுபிரானூரில் 31ம் தேதி பொறியாளர்கள் சங்க மாநாடு
பிரானூரில் 31ம் தேதி பொறியாளர்கள் சங்க மாநாடு
பிரானூரில் 31ம் தேதி பொறியாளர்கள் சங்க மாநாடு
பிரானூரில் 31ம் தேதி பொறியாளர்கள் சங்க மாநாடு
தென்காசி : பிரானூரில் வரும் 31ம் தேதி தமிழ்நாடு அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மண்டல மாநாடு நடக்கிறது.தமிழ்நாடு அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 10ம் மண்டல மாநாடு வரும் 31ம் தேதி பிரானூர் ஏஎஸ்எம் இந்திரா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நெல்லை நகர் ஊரமைப்பு துறை உறுப்பினர் செயலாளர் (பொறுப்பு) சேகரன், துணை இயக்குநர் (பொறுப்பு) பாபு விழா பேரூரையாற்றுகின்றனர். செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுந்தரராஜன், கூட்டமைப்பு மாநில செயலாளர் சிவலிங்கம், மாநில உதவி செயலாளர் சந்திரமவுலி, மாநில பொருளாளர் செந்தில்குமரன் வாழ்த்தி பேசுகின்றனர்.மண்டல செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறுகிறார். தொழில் நுட்ப கருத்தரங்கம், மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது.


