போராட்டம் தொடரும்: பிடிபி., அறிவிப்பு
போராட்டம் தொடரும்: பிடிபி., அறிவிப்பு
போராட்டம் தொடரும்: பிடிபி., அறிவிப்பு
ADDED : அக் 04, 2011 09:46 AM
ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக்கட்சித்தொண்டர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில், ஓமர் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
ஆளும் தேசிய மாநாட்டுக்கட்சித்தொண்டர் சையத் முகமது யூசுப், மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 29ம் தேதி போலீஸ் காவலில் இறந்தார். இச்சம்பவம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும், இதுகுறித்து சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஓமர் பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.


