/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன : தி.மு.க.,வினருக்கு ஏமாற்றமோ, ஏமாற்றம்பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன : தி.மு.க.,வினருக்கு ஏமாற்றமோ, ஏமாற்றம்
பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன : தி.மு.க.,வினருக்கு ஏமாற்றமோ, ஏமாற்றம்
பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன : தி.மு.க.,வினருக்கு ஏமாற்றமோ, ஏமாற்றம்
பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன : தி.மு.க.,வினருக்கு ஏமாற்றமோ, ஏமாற்றம்
ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
திருப்பூர் : சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தி.மு.க.,வினர் நடத்திய வகுப்பு புறக்கணிப்பு போராட் டம் தோல்வியில் முடிந்தது.
வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல் பட்டன. மாணவர்கள் ஆதரவு தெரிவிக்காததால், போராட்டம் ஆர்ப்பாட்டத்தோடு முடிந்தது. சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தக்கோரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தி.மு.க., அறிவித்திருந் தது. அப்போராட்டத்தை முறியடிக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருந்தன. 'அரசு பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியரை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அனைத்து ஆசிரியர்களும் வருகை புரிந்தார்களா? யாரேனும் விடுப்பு எடுத்துள்ளனரா என்ற விவரத்தை மதியம் 2.00 மணிக்குள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அரசின் பார்வைக்கு அனுப்ப வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த தி.மு.க., மற்றும் சில அமைப்புகள், சில அரசு பள்ளிகள் முன் திரண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன், தி.மு.க., வினர் மறியலில் ஈடுபட முயன்றனர்; இருவர் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.'தனியார், மெட்ரிக், நர்சரி அண்டு பிரைமரி பள்ளிகள், போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம்,' என மாநில கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததால், தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. இதேபோல், அரசு பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டன. மாணவர்கள் தரப்பில் ஆதரவு இல்லாததால், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது; தி.மு.க.,வினர் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்தனர்.திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியத்திடம் கேட்ட போது,''மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டன. நேற்று முன்தினமே போராட்டத்தில் யாரும் பங்கேற்க வேண்டாம்; ஆசிரியர்கள் கட்டாயம் விடுமுறையின்றி பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியிருந்தோம். மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களை தொந்தரவு செய்யவில்லை. வழக்கம் போலவே மாணவர்கள் வருகைப்பதிவு இருந்தது. பள்ளிகள் நடத்த எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. அதைப்பற்றிய தகவல், அரசுக்கு அனுப்பியுள்ளோம்,'' என்றார்.