Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மதகடிப்பட்டில் நரிக்குறவர் திருமணம்

மதகடிப்பட்டில் நரிக்குறவர் திருமணம்

மதகடிப்பட்டில் நரிக்குறவர் திருமணம்

மதகடிப்பட்டில் நரிக்குறவர் திருமணம்

ADDED : செப் 17, 2011 01:21 AM


Google News

புதுச்சேரி : மதகடிப்பட்டு நரிகுறவர் காலனியில் நடந்த திருமண விழாவில் பிப்டிக் சேர்மன் அங்காளன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.மண்ணாடிப்பட்டு கொம்யூன்.

மதகடிப்பட்டு, நரிகுறவர் காலனியை சேர்ந்த டவுகர்-பத்மா இவர்களின் மகன் அலிபாபாவிற்கும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த சாத்துக்குடி-ஜெயராணி இவர்களின் மகள் சிவரஞ்சினிக்கும் நேற்று இரவு 7 மணிக்கு மணமகன் இல்லத்தில் திருமணம் நடந்தது. பிப்டிக் சேர்மன் அங்காளன் எம்.எல்.ஏ., தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.நரிகுறவர் வழக்கப்படி திருமணத்தை முன்னிட்டு கடந்த 2 தினங்களுக்கு முன் மணமகன் அலிபாபா சார்பில் மணமகள் சிவரஞ்சினியின் உறவினர்களுக்கு ஆடுகள் வெட்டி பிரியாணி விருந்து அளித்தனர். திருமணத்தை முன்னிட்டு மதகடிப்பட்டு நரிகுறவர் காலனி பகுதியில் உள்ள அனைவருக்கும் மது வகைகள் வழங்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட புதிய தம்பதிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சீர்வரிசையாக ஏதுவும் வழங்கவில்லை. ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு புதிய தம்பதிகள் இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று சீர்வரிசையைப் பெற்று கொள்வர்கள் என கூறப்படுகிறது.திருமண விழாவில் கலித்தீர்த்தாள்குப்பம் என்.ஆர்.காங்., ரமேஷ், சரவணன், கார்த்திகேயன், ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us