தமிழகத்தில் மதுவிலக்கு அமல் ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம்
தமிழகத்தில் மதுவிலக்கு அமல் ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம்
தமிழகத்தில் மதுவிலக்கு அமல் ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம்

திருநெல்வேலி:தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, நெல்லையில் நடந்த ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நெல்லையில் நேற்று ம.தி.மு.க.,வின் திறந்தவெளி மாநாட்டில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தமிழக அரசு வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்த ஐ.நா.,வை உலகத் தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.தி.மு.க.,வைப் போலவே அ.தி.மு.க.,வும் இலவசங்களை வாரி வழங்குவதற்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் மது விற்பனையை ஊக்குவிக்கிறது. எனவே, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அரசு கேபிள்களில் அனைத்து சேனல்களும் தெரியும் வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.