UPDATED : செப் 27, 2011 07:31 AM
ADDED : செப் 27, 2011 03:43 AM
புதுடில்லி: கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் டில்லியில் யோகாகுருராம் தேவ் தலைமையில் ராம்லீலா மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு முறையான அனுமதி பெற வில்லை என கூறி டில்லி போலீசார் ராம்லீலா மைதானத்திற்குள் புகுந்து ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேடையில் இருந்த ராம் தேவ்வும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பேராட்டத்தில் கலந்து கொண்ட டில்லி கூர்கான் பகுதியை சேர்ந்த ராம் தேவ்வின் ஆதரவாளரான ராஜ்பாலா(51) என்ற பெண் போலீசாரின் தாக்குதலில் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனளிக்கமால் மரணம் அடைந்தார்.