/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் தாய், மகன் கழுத்தறுத்து கொலைமதுரையில் தாய், மகன் கழுத்தறுத்து கொலை
மதுரையில் தாய், மகன் கழுத்தறுத்து கொலை
மதுரையில் தாய், மகன் கழுத்தறுத்து கொலை
மதுரையில் தாய், மகன் கழுத்தறுத்து கொலை
மதுரை : மதுரையில் தனியாக இருந்த பெண் மற்றும் அவரது ஆறு வயது மகன் மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.
விஜயகுமாரின் தாய் வசந்தா, 63, இரவு 10 மணிக்கு அங்கு சாப்பிடச் சென்றபோது துர்காதேவி, ஸ்ரீராம் கழுத்தறுபட்டு பிணமாக கிடந்ததை கண்டார். தெப்பக்குளம் போலீசார் விசாரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. துர்காதேவி அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல்களை காணவில்லை. துணிகளுக்கு காஜா தைக்கும் வேலை அங்கு நடந்து வந்தது. நான்கு பெண்கள் உட்பட ஐந்துபேர் வேலை செய்து வந்தனர். அவர்கள் இரவு 9.15 மணிக்கு வேலை முடிந்து சென்றனர். அதன் பிறகே கொலை நடந்துள்ளது. பீரோவில் 1 லட்சம் ரூபாய், 50 பவுன் நகை இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் அல்லது முன்விரோதத்தில் உறவினர்கள் கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போட்டோகிராபர்களுக்கு மிரட்டல்