Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் நகராட்சிப் பள்ளிக்குரூ.20 லட்சம் தளவாடப் பொருட்கள்

விழுப்புரம் நகராட்சிப் பள்ளிக்குரூ.20 லட்சம் தளவாடப் பொருட்கள்

விழுப்புரம் நகராட்சிப் பள்ளிக்குரூ.20 லட்சம் தளவாடப் பொருட்கள்

விழுப்புரம் நகராட்சிப் பள்ளிக்குரூ.20 லட்சம் தளவாடப் பொருட்கள்

ADDED : செப் 25, 2011 01:41 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான டேபிள், சேர்கள் நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் நகராட்சி காமராஜர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த 1917ல் துவங்கப்பட்டு 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பழமையான பள்ளிகளில் ஒன்றாக இப்பள்ளியில் தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படித்த பல மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கிய துறைகளிலும், அரசியல் பிரமுகர்களாகவும் உள்ளனர். இருப்பினும் இப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அமருவதற்கு தேவையான அளவில் டேபிள், சேர்கள் மற்றும் பெஞ்சு வசதி இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் விழுப்புரம் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் நகராட்சி சேர்மன் ஜனகராஜ், துணை சேர்மன் பார்த்திபன் மற்றும் கவுன்சிலர்கள் பள்ளியை ஆய்வு செய்து தேவையான உபகரணங்கள் வழங்க மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து 250 மாணவர்களுக்கு பெஞ்சு-டெஸ்க், கம்ப்யூட்டர் அறைக்கு பயன்படுத்த 25 'எஸ் டைப்' சேர்கள், 30 பீரோக்கள், தலைமையாசிரியருக்கு எக்ஸ்கியூட்டி சேர், டேபிள், ஆசிரியர்களுக்கு 10 செட் டேபிள், சேர், 10 நாற்காளிகள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கு 25 'எஸ் டைப்' சேர்கள் உள்ளிட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் பள்ளியில் தேவையான இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன.தற்போது விழுப்புரம் நகராட்சி காமராஜர் மேல் நிலைப் பள்ளி தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us