ADDED : செப் 21, 2011 11:28 PM
பாகூர்:சேலியமேட்டில் எரியாமல் உள்ள தெரு மின் விளக்குகளை சரி செய்ய மின்
துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேலியமேடு ஆஞ்சநேயர் கோவில் வீதியில்
கிருஷ்ணர் கோவில், ஓம் சக்தி கோவில் உள்ளது. இக்கோவில்களுக்கு தினமும்
100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இச்சாலையில் உள்ள மின்
விளக்குகள் கடந்த பல மாதங்களாக எரியாததால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது.
இதனால் பக்தர்களும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.எனவே எரியாத தெரு
மின் விளக்குகளை
சரி செய்ய மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.