ADDED : செப் 18, 2011 09:45 PM
பேரூர் : ஆம்னி வேன் மீது பைக் மோதியதில் ஒருவர்
உயிரிழந்தார்.தொண்டாமுத்தூர், அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர்
சந்திரன்(42); ராணுவத்தில் வேலை பார்க்கிறார்.
இவரது மகன்
பார்த்தசாரதி(24). தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் தனது,
பைக்கில் வடவள்ளியிலிருந்து, தொண்டாமுத்தூர் ரோட்டில் சென்று
கொண்டிருந்தார். கே.ஜி., மில் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது, எதிரே வந்த
ஆம்னி வேன் மீது பைக் வேகமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட
பார்த்தசாரதி அதே இடத்தில் உயிரிழந்தார். சந்திரன் அளித்த புகாரின் பேரில்,
வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.