/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலிவேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி
வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி
வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி
வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி
ADDED : செப் 20, 2011 11:39 PM
துறையூர்: துறையூர் அருகே வேகத்தடையில் பஸ் ஏறி, இறங்கிய அதிர்ச்சியில் பஸ்ஸிலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
உப்பிலியபுரம், எல்லையோடும் வீதியை சேர்ந்த வடகிரி மனைவி குமாரத்தி (52). இவர் தினமும் துறையூருக்கு பஸ்ஸில் சென்று, காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு விக்னேஷ் என்ற பஸ்ஸில் உப்பிலியபுரத்திலிருந்து துறையூருக்கு புறப்பட்டார். பஸ் வெங்கடாசலபுரம் அருகே சென்றபோது, சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி, இறங்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் குமாரத்தி, நிலைகுலைந்து சாலையில் விழுந்தார். இதில், தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். உப்பிலியபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தில், பெருமாள்பாளையத்தை சேர்ந்த பஸ் டிரைவர் பெரியசாமி (33) கைது செய்யப்பட்டார்.