Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்று சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை:மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

இன்று சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை:மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

இன்று சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை:மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

இன்று சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை:மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

ADDED : செப் 15, 2011 11:54 PM


Google News

சென்னை:'சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், நாளை(இன்று), பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறாது' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் கூறினார்.சென்னையில், மூன்று புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள், இன்று முதல் செயல்பட உள்ளன.

இவற்றின் துவக்க விழாவையொட்டி, 'சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், நாளை(இன்று) விசாரணை 'கவுன்டர்'கள் இயங்காது. சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான இன்றைய சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும்.'தத்கல்' முறை விண்ணப்பங்களுக்கு மட்டும், காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us