நெல்லையில் தமிழ்நாடு கண்மருத்துவர்கள் மாநாடு
நெல்லையில் தமிழ்நாடு கண்மருத்துவர்கள் மாநாடு
நெல்லையில் தமிழ்நாடு கண்மருத்துவர்கள் மாநாடு
UPDATED : ஆக 05, 2011 04:55 PM
ADDED : ஆக 05, 2011 03:56 PM

திருநெல்வேலி: 59வது தமிழ்நாடு கண் மருத்துவர்கள் மாநாடு, நெல்லையில் இன்று துவங்கி, 3 நாட்கள் (ஆகஸ்ட் 5,6 மற்றும் 7) நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளியில் நடக்கும் இந்த மாநாட்டை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். மாநாட்டையொட்டி, கண் நோய்கள் மற்றும் கண் மருத்துவத்துறை வளர்ச்சி குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.