Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/திருநாகேஸ்வரம் ஸ்டேஷனில் ரயில் நிற்க பக்தர்கள் கோரிக்கை

திருநாகேஸ்வரம் ஸ்டேஷனில் ரயில் நிற்க பக்தர்கள் கோரிக்கை

திருநாகேஸ்வரம் ஸ்டேஷனில் ரயில் நிற்க பக்தர்கள் கோரிக்கை

திருநாகேஸ்வரம் ஸ்டேஷனில் ரயில் நிற்க பக்தர்கள் கோரிக்கை

ADDED : அக் 03, 2011 03:05 AM


Google News

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலமான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில், தமிழக திருப்பதி ஒப்பிலியப்பன்கோவில், அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவில் என பிரசித்திபெற்ற ஆலயங்கள் உள்ளது.

திருநாகேஸ்வரத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருநாகேஸ்வரத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தும் முக்கியமான ரயில்கள் எதுவும் நிற்பதில்லை. இதனால் பெரும்பாலான பக்தர்கள் ரயிலில் பயணிக்க முடியவில்லையே என வருந்துகின்றனர்.

திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் திருநாகேஸ்வரம் ஸ்டேஷனில் நின்று செல்லவேண்டும். மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆடுதுறை, குத்தாலம் ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது. அந்த ரயில் திருநாகேஸ்வரம் ஸ்டேஷனில் நின்று செல்லவேண்டும் என்று பெரும்பாலான பக்தர்களும், அப்பகுதி மக்களும் கோரி வருகின்றனர். ரயில் வரும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் திருநாகேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் வழங்கும் அலுவலகம் பூட்டி கிடக்கிறது.

காலை முதல் இரவு வரை பணியிலிருக்கவேண்டியவர் ரயில் வரும் நேரம் தெரிந்துகொண்டு அந்நேரத்துக்கு மட்டும் வருகிறார். சில நேரங்களில் ஸ்டேஷன் மாஸ்டர் தாமதமாக வருவதால் நின்று செல்லும் பாசஞ்சர் ரயிலுக்கு டிக்கெட் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ரயில்வே பற்றி விசாரிப்பதற்காக பயணிகள் சென்றால் எந்ந நேரத்திலும் பூட்டியே உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ரயில்வே துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என இரயில்பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்து ரயில்களும் திருநாகேஸ்வரத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை வேண்டி பயணிகள் கோரி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us