/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/செப்.22 முதல் அக்.1 வரை காலாண்டு தேர்வு நடக்கும்செப்.22 முதல் அக்.1 வரை காலாண்டு தேர்வு நடக்கும்
செப்.22 முதல் அக்.1 வரை காலாண்டு தேர்வு நடக்கும்
செப்.22 முதல் அக்.1 வரை காலாண்டு தேர்வு நடக்கும்
செப்.22 முதல் அக்.1 வரை காலாண்டு தேர்வு நடக்கும்
ADDED : செப் 15, 2011 09:18 PM
சிவகங்கை : ''மாவட்டத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு செப்.22ல் காலாண்டு தேர்வு துவங்குவதாக,'' முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தெரிவித்தார்.
தினமும் காலை 9.30 முதல் பிற்பகல் 12 மணி வரை 6, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் 12.30 மணி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடக்கும். பிற்பகல் 1.30 முதல் மாலை 4 மணி வரை 7, 9ம் வகுப்பிற்கும், மாலை 4.30 மணி வரை பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெறும். தமிழ், ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் , கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், அறிவியல், சமூக அறிவியல், இயற்பியல், வேதியியல், பொருளியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். அக்.,1 வரை தேர்வுகள் நடைபெறும். அக்.,2 முதல் 6 வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். மீண்டும், அக்.,7ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும். மேலும், அக்டோபர் மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் என தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.