ADDED : ஜூலை 17, 2011 01:49 AM
மதுரை : மதுரை புறநகர் பகுதியில் நிலமோசடி வழக்குகள் தொடர்பாக, நேற்று தி.மு.க., வினர் எஸ்.பி., ஆஸ்ரா கார்க்கிடம் புகார் செய்தனர்.நிலமோசடி தொடர்பாக யாராவது பொய் புகார் கொடுத்தாலும், போலீசார் எவ்வித விசாரணையும் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர்.
எந்த புகாராக இருந்தாலும் முழுமையாக விசாரித்த பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என எஸ்.பி.,யிடம் வலியுறுத்தப்பட்டது.