/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/துரிஞ்சல் ஆற்றில் ரூ.2.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்துரிஞ்சல் ஆற்றில் ரூ.2.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
துரிஞ்சல் ஆற்றில் ரூ.2.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
துரிஞ்சல் ஆற்றில் ரூ.2.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
துரிஞ்சல் ஆற்றில் ரூ.2.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஆக 01, 2011 01:28 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் துரிஞ்சல் ஆற்றில் 2.50 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.திருக்கோவிலூர் துரிஞ்சல் ஆற்றில் உள்ள இரும்பு பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலை யில் உள்ளது.
இதனை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி நெடுஞ்சாலைத் துறை சார்பில் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கான கட்டுமானப்பணிகள் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.